×

தமிழ்நாடு அரசின் நெல் கொள்முதல் ஊக்கத்தொகை வழங்க ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

சென்னை: தமிழ்நாடு அரசின் நெல் கொள்முதல் ஊக்கத்தொகை வழங்க ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு சட்டப்பேரவையில் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிய வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்; நெல் அரவைத் திறனை மேலும் அதிகரித்திட, ஆறு புதிய நவீன அரிசி ஆலைகள் தனியார் பங்களிப்புடன் செயல்படுத்தப்படவுள்ளன. நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொணரப்பட்ட நெல்மணிகளை இயற்கையின் இடர்ப்பாடுகளிலிருந்து காத்திட, நெல் சேமிப்புக் கட்டமைப்புகள் 18 இடங்களில் 238 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ளன.

மேலும், 250 மெட்ரிக் டன் கொள்ளளவிலான 55 எண்ணிக்கையிலான நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் அமைக்கப்பட்டு வருகின்றன. 2024-2025-ஆம் ஆண்டில், உணவுப் பாதுகாப்பினை உறுதி செய்யும் உணவு மானியத்திற்கு, 10,500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், தமிழ்நாடு அரசின் நெல் கொள்முதல் ஊக்கத் தொகை வழங்குவதற்கு என, 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று கூறினார்.

The post தமிழ்நாடு அரசின் நெல் கொள்முதல் ஊக்கத்தொகை வழங்க ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் appeared first on Dinakaran.

Tags : Government of Tamil Nadu ,Minister ,M. R. K. Paneer Selvam ,Chennai ,Minister of Agriculture and Farmers Welfare ,
× RELATED தமிழ்நாடு அரசின் 108 கட்டுப்பாட்டு...